திருவனந்தபுரம்: ஆன்லைன் ரம்மி விளையாட்டு சட்டவிரோதமானது என்று கேரளா அறிவித்துள்ளது.
கம்ப்யூட்டர்கள், செல்போன்கள் மூலமாக சூதாட்டம் போன்ற சம்பவங்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன. அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதோடு, தற்கொலை சம்பவங்களும் பதிவாகின்றன.
இந் நிலையில் கேரளாவில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு சட்ட விரோதமானது என்ற அறிவிப்பை மாநில அரசு வெளியிட்டுள்ளது. கேரள விளையாட்டு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டதை அடுத்து, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முன்னதாக, ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை கோரி அம்மாநில உயர்நீதி மன்ற்ததில் வழக்கு தொடரப்பட்டது. மனு மீதான விசாரணையில் இது போன்ற விளையாட்டுகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க போவதாக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் உறுதியளிக்கப்பட்டு இருந்தது.