சென்னை: தமிழகத்தில் 9,10,11-ம் வகுப்பு மாணவர்கள் ஆல்பாஸ் என சட்டமன்றத்தில் முதல்வர் அறிவித்த  நிலையில், அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, தமிழகத்தில் பள்ளிகள் இன்னும் முழுமையாக திறக்கப்படவில்லை. இதையொட்டி,  9,10,11-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வுயின்றி தேர்ச்சி பெறுவதாக  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிட்டார். விதி எண் 110ன் கீழ் தமிழக சட்டப்பேரவையில் இதை  அறிவித்துள்ளார்.

இந்நிலையில், 9,10,11-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.