சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை, மே மாதம் 2ம் தேதிதான் எண்ணப்படும் என்ற நிலையில், ஏப்ரல் 6ம் தேதியே எதற்காக, தமிழ்நாட்டில் இத்தனை அவசரமாக தேர்தலை நடத்த வேண்டுமென்ற கேள்விகள் பரவலாக எழுந்துள்ளன.
பொதுவாக, பல கட்சிகளின் கோரிக்கை ஏப்ரல் இறுதிவாக்கில் தேர்தலை நடத்த வேண்டும் என்பதே. தேர்தல் ஆணையத்திடமும் அதுதான் தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் ஏன் இந்த அறிவிப்பு?
வாக்குப்பதிவு முடிந்து, மொத்தம் 25 நாட்கள், வாக்குப் பதிவு இயந்திரங்கள் காத்துக் கொண்டிருக்க வேண்டுமா? அவற்றின் பாதுகாப்பு குறித்து, எதிர்க்கட்சிகள் 25 நாட்களும் எதற்காக பதைபதைப்பிலேயே இருக்க வேண்டும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
தேர்தல் கமிஷனின் நடவடிக்கைகள் கடந்த 5 ஆண்டுகளாகவே சர்ச்சைக்குரியதாக மாறிவிட்ட நிலையில், இந்த அறிவிப்பின் மூலமும், அந்த சர்ச்சையை வலுவாக்கியுள்ளது தேர்தல் கமிஷன் என்கின்றனர் விமர்சகர்கள்.