டில்லி

டைபெற உள்ள 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு தாங்கள் முழு அளவில் தயாராக உள்ளதாகக் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை அறிவித்துள்ளார்.   ஏற்கனவே அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்து மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.  இம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியும் திமுகவும் கூட்டணி அமைக்க உள்ளன.  இன்று தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதை ஒட்டி காங்கிரஸ் மூத்த தலைவர் கேசி வேணுகோபால் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், “காங்கிரஸ் கட்சி தேர்தலுக்கு முழு அளவில் தயாராக உள்ளது.  நாங்கள் மக்களிடம் மாறுதல் மற்றும் நல்லாட்சி அளிப்போம் என உறுதி அளித்து வாக்கு சேகரிக்க உள்ளோம்.   ஏற்கனவே அசாம் மாநிலத்தில் கூட்டணி முடிவாகி விட்டது.

அதைப் போல் மேற்கு வங்கம் மற்றும்க் கேரளாவிலும் கிட்டத்தட்ட கூட்டணி முடிவாகி உள்ளது.  தமிழகத்தில் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன” எனத் தெரிவித்தார்.