வாஷிங்டன்:
அமெரிக்காவில் நடந்துவரும் பரவலான சைபர் தாக்குதலில் ஹேக்கர்கள் தற்போது நாசா மற்றும் கூட்டாட்சி விமான போக்குவரத்தை குறி வைத்துள்ளதாக வாஷிங்டன் செய்தி அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்த சைபர் குற்றவாளிகள் ரஷ்யாவை சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனவும் அந்த செய்தி அறிக்கை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் இந்த பரவலான சைபர் தாக்குதலை மத்திய புலனாய்வு குழு விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வாஷிங்டனின் இந்த செய்தி அறிக்கையை நாசா செய்தித் தொடர்பாளர் மறுக்கவில்லை, ஆனால் நடந்து கொண்டிருக்கும் விசாரணையை பற்றி அவர் பேச மறுத்துவிட்டார்.
அமெரிக்காவை தாக்கும் இந்த ஹேக்கர்கள் ரஷ்ய வம்சாவளியை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் அமெரிக்காவில் இருந்துதான் தங்களுடைய தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருவதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அன்னே நியூபெர்கர் அமெரிக்காவில் நடந்த மாநாட்டில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவத்தில் விரிவான விசாரணையை நடத்தி முடிக்க அமெரிக்க அரசுக்கு பல மாதங்கள் எடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.