தமிழ் திரையுலகில் ரசிகர்களின் ஃபேவரைட் இயக்குனர்களில் ஒருவர் அஸ்வின் சரவணன்.
தன் பெயரைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபடும் போலி ஐடியைப் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அஸ்வின் சரவணன்.
போலி ஐடி குறித்த எச்சரிக்கை: இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போலி ஐடியின் மூலம் என் பெயரைப் பயன்படுத்தி ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டு வருவது எனது கவனத்துக்கு வந்தது. அவர் பல பெண்களிடம் புகைப்படங்கள் மற்றும் தொலைபேசி எண் கேட்டு வருகிறார். இதுபோன்ற உரையாடல்களில் ஈடுபடும் முன் உறுதிசெய்து கொள்ளுமாறு அனைத்து நடிகர்களிடமும் கேட்டுக் கொள்கிறேன். இது மட்டுமே என்னுடைய ஒரே ஐடி என பதிவிட்டுள்ளார்.
மேலும் அத்துடன் ஒரு ஸ்க்ரீன்ஷாட்டையும் அஸ்வின் இணைத்துள்ளார். அதில் அந்தப் போலி ஐடி நபர் ஒரு பெண்ணிடம் தான் அதர்வாவை வைத்துப் படம் இயக்கவுள்ளதாகவும், அப்பெண்ணுக்கு விருப்பம் இருந்தால் அவரைத் தன்னுடைய படத்தில் நாயகியாக்குவதாகவும் பேசியுள்ளார்.
https://twitter.com/Ashwin_saravana/status/1364431980088197120