டெல்லி: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் ராஜினாமாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுள்ளார்.

புதுச்சேரி சட்டசபையில் காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் தோல்வி அடைந்தது. இதையடுத்து முதல்வர் நாராயணசாமி பதவியை ராஜினாமா செய்தார்.
அவர் ராஜினாமா கடிதத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம் அளித்திருந்தார். ஆளுநர் இதை ஏற்றதாகவும் கூறப்பட்டது.
இந் நிலையில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் ராஜினாமாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றார். மேலும் புதுச்சேரி அமைச்சரவையின் ராஜினாமாவையும் அவர் ஏற்றுள்ளார்.
Patrikai.com official YouTube Channel