யாங்கோன்: போராட்டக்காரர்களுக்கு எதிராக கடும் அடக்குமுறை மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்தும், பர்மாவின் மிகப்பெரிய நகரில் ஏராளமான ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மியான்மர் நாட்டு ஆட்சியதிகாரத்தை ராணுவம் கடந்த 3 வாரங்களுக்கு முன்னதாக மீண்டும் கைப்பற்றியதை அடுத்து, அதனை எதிர்த்து அந்நாட்டில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தலைநகர் யாங்கோனில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே 1000க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள், சாலைத் தடுப்புகளையும் மீறி திரண்டனர். அதேசமயம், அங்கு வந்த 20 ராணுவ டிரக்குகளுடன் எந்த மோதலையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை. போராட்டமானது, சூல் பகோடா போன்ற மியான்மரின் இதர நகரங்களிலும் நடந்து வருகிறது.
மியான்மிரில், நாடு தழுவிய வேலை நிறுத்த அழைப்பையடுத்து, அங்கு தொழிற்சாலைகள், பணியிடங்கள் மற்றும் கடைகள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. தலைநகர் யாங்கோனிலும் அதே நிலைதான்.
ஆனால், இந்தப் பொது வேலை நிறுத்தத்திற்கு எதிராக, அந்நாட்டு ராணுவ அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. போராட்டக்காரர்கள் மக்களிடம், குறிப்பாக, இளைய சமூகத்திடம் வன்முறை உணர்வை விதைப்பதாக அது குற்றம் சாட்டியுள்ளது.