அகமதாபாத்: குஜராத் முதலமைச்சர் விஜய் ருபானிக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா நகரில் பிப்ரவரி 15ம் தேதி நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய குஜராத் முதல்வர் விஜய் ருபானி திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து, அவர் அகமதாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் பிரதமர் மோடி, விஜய் ருபானியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல்நிலை குறித்து விசாரித்து அறிந்தார்.
இந்நிலையில் குஜராத் முதல்வர் விஜய் ருபானி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel