டில்லி

த்திய மோடி அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உதவ பெட்ரோல் டீசல் மீதான வரிகளைக் கடுமையாக்கி விலையை உயர்த்தியதாகக் காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி கூறி உள்ளார்.

தினசரி விலை உயர்வைச் சந்திக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் தினமும் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது.   நாட்டில் சில பகுதிகளில் பெட்ரோல் விலை ரூ. 100க்கும் மேல் அதிகரித்துள்ளது.   பொதுமக்கள் இதனால் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.   எரிபொருள் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்கள் விலையும் அதிகரித்து வருகிறது.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

அவ்வகையில் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி தனது முக நூலில், “ஒவ்வொரு வாரத்தில் பெட்ரோலும் டீசலும் விலை உயராத சிறந்த நாட்கள் எவை? என பா.ஜனதா அரசு கூற வேண்டும். ஏன் என்றால் விலைவாசி உயர்வு காரணமாகச் சாதாரண மக்களுக்கு மீதமுள்ள நாட்கள் அனைத்தும் மோசமான நாட்களாக அமைகின்றன’

மத்திய மோடி அரசு கார்பரேட் நிறுவனங்களுக்காக பெட்ரோல்-டீசல் மீது கடுமையான வரி விதித்து அவற்றின் விலையைத் தினமும் ஏற்றி வருகிறது.  ஆயினும் பாடுபடும் விவசாயிகளுக்கு தங்கள் விளைபொருட்களுக்கான விலையை அளிக்க மறுத்து வருகிறது”  எனப் பதிவிட்டுள்ளார்.