சிங்கப்பூர்:
பிப்ரவரி 22ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.
சிங்கப்பூரில் தற்போது வரை 2,50,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக, அனைத்தும் சரியாக நடந்தால் ஏப்ரல் மாதத்திற்குள் மேலும் ஒரு மில்லியன் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கும் என்று சிங்கப்பூரின சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் ஏப்ரல் மாதத்திற்குள் ஒரு மில்லியன் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டு முடிப்பதே எங்களின் முக்கிய நோக்கமாக உள்ளது என்று சிங்கப்பூரின் கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் உள்ள ஜலான் பெசார் சமூக கிளப்பில் உள்ள தடுப்பூசி மையத்தில் செய்தியாளர்களிடம் தொடர்ந்து பேசிய சிங்கப்பூரின் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளதாவது: சிங்கப்பூரில் இம்மாதம் 22 ஆம் தேதி முதல் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு கொரோனா தடுப்பூசி போட தொடங்கப்படும் எனவும், பிப்ரவரி 22 ஆம் தேதிக்கு பிறகு 70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள அழைப்பு விடுக்கப்படும் எனவும், சிங்கப்பூரில் தற்போது 11 தடுப்பூசி மையங்கள் செயல்பட்டு வருவதாகவும், அடுத்த வாரத்தில் மேலும் மூன்று தடுப்பூசி மையங்கள் திறக்க போவதாகவும் ஏப்ரல் மாதத்திற்குள் முழுமையாக 40 தடுப்பூசி மையங்கள் செயல்பட்டு வரும் எனவும் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
தேவைப்பட்டால் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய கூடுதல் தடுப்பூசி மையம் திறக்கப்படும் எனவும் சிங்கப்பூரின் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.