காதலியின் பிறந்த நாளுக்கு மலர்கள், நகைகள், உடைகள் பரிசளிப்பது, காதலர்களின் வழக்கம்.

துபாயில் ஒரு இளைஞன், தனது காதலிக்கு விநோத பரிசு அளித்துள்ளார்.

பாலைவனத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஒட்டகத்தின் குட்டியை, அதன் உரிமையாளருக்கு தெரியாமல் ஓட்டிக்கொண்டு வந்து காதலிக்கு பரிசாக அளித்தார்.

காதலியும் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார்.

ஒட்டகத்தை காணாத உரிமையாளர் இது குறித்து போலீசில் புகார் கொடுத்தார்.

ஒட்டகத்தையும், திருடனையும் போலீசார் தேடுவதை அறிந்த காதலன் அதிர்ச்சி அடைந்தார்.

காதலியிடம் விஷயத்தை சொல்லி, ஒட்டகத்தை வாங்கி,எந்த இடத்தில் களவாடினாரோ அந்த இடத்துக்கே கொண்டு வந்து விட்டுள்ளார்.

போலீஸ் பிடியில் இருந்து அவரால் தப்ப முடியவில்லை.

போலீசார் தீவிர விசாரனையில் அந்த இளைஞர் யார் என்பது தெரிந்தது.

ஒட்டகத்தை களவாடிய காதலன் மற்றும் அதனை பெற்றுக்கொண்ட காதலி ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.

– பா. பாரதி