நய்பிடாவ்:
மியான்மரில் அனைத்து மொழியிலும் விக்கிபீடியா பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக NetBlocks தெரிவித்துள்ளது.
மியான்மரின் வடக்குப் பகுதியில் இருக்கும் கச்சின் என்கிற மாகாணத்தில், ஒன்பதாவது நாளாக நடந்து வந்த ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிரான போராட்டத்தில் ராணுவத்தினர் துப்பாக்க்கிச்சூடு நடத்தினர்.
மியான்மரில் ராணுவம் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதற்கு எதிராகப் போராடுபவர்களுக்கு எதிராக, அந்த நாட்டு ராணுவம் வன்முறையில் இறங்கக் கூடாது” என ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் கையெழுத்திட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளன.
தற்போது ஆங் சான் சூச்சி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். நூற்றுக்கணக்கான செயற்பாட்டாளர்கள், எதிர்கட்சித் தலைவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மியான்மரில் அனைத்து மொழிகளிலும் விக்கிபீடியாவை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து NetBlocks வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், உறுதிப்படுத்தப்பட்டது: ராணுவ ஆட்சிக்குழுவால் விதிக்கப்பட்ட பரந்த ஆட்சி கவிழ்ப்பு இணைய தணிக்கை ஆட்சியின் ஒரு பகுதியான விக்கிபீடியா ஆன்லைன் கலைக்களஞ்சியத்தின் அனைத்து மொழி பதிப்புகளையும் பயன்படுத்த தடை விதிக்கபட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.