சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முதற்கட்டமாக 45 கம்பெனி மத்திய துணை ராணுவத்தினர் வர உள்ளனர்.

சட்டசபையின் பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் நிறைவடைகிறது. ஆகையால் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. தேர்தலை எதிர்கொள்ளவுள்ளதால் அதற்கான பணிகளை அரசியல் கட்சியல் இப்போதே தொடங்கி விட்டன.

அதேசமயம், தேர்தலுக்காக ஆயத்த பணிகளை தேர்தல் ஆணையமும் தொடங்கி உள்ளது. அந்த வகையில், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

இந் நிலையில் சட்டசபை தேர்தல் பாதுகாப்பு பணிக்காக பிப்ரவரி 25ம் தேதி 45 கம்பெனி துணை ராணுவப்படையினர் தமிழகம் வர உள்ளது. இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். ஒரு கம்பெனியில் 100 முதல் 150 வீரர்கள் இருப்பார்கள் என்று தெரிகிறது.