சென்னை: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையிலான குழு , சென்னை ராஜ்பவனில் இன்று மாலை 5:30 மணியளவில் ஆளுநரை சந்தித்து, அதிமுக அமைச்சர்கள் மீதான 2வது ஊழல் பட்டியல் வழங்கினர்.
ஏற்கனவே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 22-ம் தேதி ஆளுநரை சந்தித்து, அதிமுகவைச் சேர்ந்த 8 அமைச்சர்கள் மீதான புகார் பட்டியலை வழங்கிய நிலையில், தற்போது 2வது பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.
கிண்டி ராஜ்பவனில் ஆளுநரை சந்தித்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மற்றும் அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி உள்ளிட்டோர் அதிமுக அமைச்சர்கள் மீது தாங்கள் அளித்துள்ள ஊழல் புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க ஆளுநரிடம் திமுகவினர் வலியுறுத்தியுள்ளனர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், 5 அமைச்சர்கள், ஒரு எம்.எல்.ஏ மீது 9 புகார்கள் அடங்கிய ஆதாரத்துடன் கூடிய ஊழல் பட்டியல் தந்துள்ளோம். அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு தனக்கு இருக்கும் அதிகாரத்தின் படி உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதி அளித்துள்ளார். என்று தெரிவித்துள்ளார். ஆனால், அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க, ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது.
ஏற்கனவே முக ஸ்டாலின் கொடுத்த ஊழல் பட்டியலை, ஆளுநர் மத்திய உள்துறை அமைச்சருக்கு அனுப்பியுயுள்ளதாக தெரிவித்ததாகவும், அதிமுக அரசு மீதான 3வது பட்டியல் வழங்கும் வாய்ப்பு இருக்கா என்ற கேள்விக்க பதில் கூறிய கூறிய துரைமுருகன், அதற்குள் இந்த அரசு இருக்காது என்றும் தெரிவித்தார்.