சென்னை: சேப்பாக்கம் இரண்டாவது டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில், உணவு இடைவேளையின்போதான நேரத்தில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்களை எடுத்துள்ளது.

இதன்மூலம், இங்கிலாந்தைவிட, ஒட்டுமொத்தமாக 351 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இன்றைய நாளில், இந்திய பேட்ஸ்மென்கள் அவசரப்பட்டு தங்களது விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர். மொத்தம் 3 நாட்கள் மீதமிருக்கும் நிலையில், சற்று பொறுமையாக ஆடியிருக்க வேண்டிய ரோகிர் ஷர்மா & ரிஷப் பன்ட் இருவரும் இறங்கிவந்து ஆட முயன்று ஸ்டம்பிட் முறையில் அவுட்டானார்கள்.

புஜாரா ரன்அவுட் ஆனார். ரஹானே மற்றும் அக்ஸர் படேலும் வெளியேற, தற்போது, கோலியும் அஸ்வினும் நிலைத்து நின்று ஆடிவருகிறார்கள். விராத் கோலி 38 ரன்களுடனும், அஸ்வின் 34 ரன்களுடனும் ஆடிவருகின்றன. இந்திய அணியின் ஸ்கோர் உயர்வதற்கு இவர்களே காரணம்.

இன்னும், ஒரு 100 ரன்கள் இந்திய கணக்கில் சேரும் பட்சத்தில், இங்கிலாந்து இந்த டெஸ்ட் போட்டியில், மோசமான தோல்வியை சந்திக்கும் என்பதில் சந்தேகமில்லை.