
ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கவுள்ள படத்தில் பிரகாஷ் ராஜ், யோகி பாபு இருவரும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.
இதில் நாயகியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ‘மாஃபியா’ படத்துக்குப் பிறகு அருண் விஜய் – ப்ரியா பவானி சங்கர் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கி, ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.
யோகி பாபு, குக் வித் கோமாளி புகழ், அம்மு அபிராமி,பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
தற்போது இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
[youtube-feed feed=1]The Most sensational music director @gvprakash is part of ours #AV33 & #Hari16#DirectorHARI@DrumsticksProd @arunvijayno1 @priya_Bshankar @iYogibabu @prakashraaj @realradikaa @GarudaRaam @Ammu_Abhirami @0014arun @ertviji @clusters_media @johnsoncinepro @CtcMediaboy pic.twitter.com/AxXHvDtynW
— Drumsticks Productions (@DrumsticksProd) February 10, 2021