சேலம்: புகழ்பெற்ற சித்த மருத்துவர் சேலம் டாக்டர் சிவராஜ் காலமானார். அன்னாரின் மறைவுக்கு அனைத்து தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சேலத்தை தலைமை இடமாக கொண்டு 7 தலைமுறைகளாக சித்த மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்று மக்களுக்கு சேவையாற்றி வரும்,   பாரம்பரிய சித்த மருத்துவரான  சிவராஜ்  சிவகுமார், ஆண்மை குறைவு, நரம்பு தளர்ச்சிக்கான சித்த மருத்துவத்தில் பிரபலமான சிவராஜ்,பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று மக்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். சித்தா உள்பட பாரம்பரிய மருத்துவக்கல்லூரிகளையும் நடத்தி வருகிறார்.
வயது முதிர்வு காரணமாக,  உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில்சிகிச்சை பலனின்றி  நள்ளிரவு  நள்ளிரவு 12 .05 மணி அளவில் காலமானார். அவரின் உடல் சேலம் சிவதாபுரத்திலுள்ள, அவரின் பூர்விக வீரான அகஸ்தியர் மாளிகையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அவரின் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரின் உடல் நல்லடக்கம் இன்று மாலை நடைபெறும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.