கொல்கத்தா: மேற்குவங்கத்தில் அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று அம்மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அம்மாநில சட்டசபையில் கடந்த வெள்ளிக்கிழமை 2021-22க்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று காலை மீண்டும் அவை கூடியது.
அப்போது முதலமைச்சர் மமதா பானர்ஜி பேசியதாவது: மாநில பட்ஜெட்டை பார்த்து, தேர்தலுக்காக செய்யப்படும் விளம்பரம் என்று சிலர் கருத்து கூறுகிறார்கள். இது விளம்பரமாக இருந்தாலும் அவர்களுக்கு இதில் என்ன பிரச்னை?
இன்னும் சிலரோ, இந்த அரசு சில நாள்கள் மட்டுமே இருக்கும் என்று சொல்கிறார்கள். அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்று மமதா பானர்ஜி தெரிவித்தார்.