டில்லி
கொரோனாவுக்கு எதிரான சக்தியைப் பெற இந்திய மக்கள் 500 கோடிகளுக்கு மேல் வைட்டமின் சி, ஜிங்க், போன்ற சக்தி மாத்திரைகளை வாங்கி உள்ளனர்.
கடந்த வருடத் தொடக்கத்தில் இந்தியாவில் கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. அது சிறிது சிறிதாக பரவி நாடெங்கும் பரவியது. தற்போது உலக அளவில் இந்தியா கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளது. சென்ற வருடம் மார்ச் மாதம் முதல் பரவல் தீவிரமாக இருந்தன. அப்போது கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாமல் இருந்தது.
எனவே கொரோனா பரவலைத் தடுக்க மக்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி மிகவும் அவசியமானதாக விளங்கியது. இதையொட்டி இந்தியர்கள் அதிக அளவில் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் மருந்துகளையும் மல்டி வைட்டமின் மாத்திரைகளையும் பயன்படுத்தத் தொடங்கினர். இதில் ஜிங்க் சக்தி குறைபாடு உள்ளோருக்கு கொரோனா தொற்று விரைவில் ஏற்பட வாய்ப்பு இருக்கும் என்பதால் வைட்டமின் சி மாத்திரைகளுடன் ஜிங்க் சக்தி உள்ள மாத்திரைகளையும் பலர் பயன்படுத்த தொடங்கினர்.
பொதுவாகவே இந்திய மக்கள் அதிக அளாவில் மல்டி வைட்டமின் உள்ளிட்ட மாத்திரைகளை அதிக அளவில் உட்கொள்ளுவது வழக்கமாகி உள்ள நிலையில் கடந்த 20119 ஆம் வருடம் 185 கோடி அளவுக்கு மல்டி வைட்டமின் மற்றும் வைட்டமின் சி போன்ற மாத்திரைகளை இந்தியர்கள் வாங்கி உள்ளனர். ஆனால் 2020 ஆம் ஆண்டு அந்த மாத்திரைகளின் எண்ணிக்கை அதைப் போல் 2 மடங்கு அதிகரித்துள்ளது.
இந்த அதிகரிப்பு மொத்தத்தில் வைட்டமின்கள் மட்டுமின்றி ஜின்கோவைட் எனப்படும் ஜிங்க் சக்தி அளிக்கும் மாத்திரைகளுக்கும் ஏற்பட்டுள்ளது. இந்த மாத்திரைகள் விற்பனை 2019 ஐ விட 93% அதாவது 54 கோடி மாத்திரைகளாக அதிகரித்தன. ஆக மொத்தம் வைட்டமின்கள், மினரல்கள் போன்றவை அனைத்தும் விற்பனை அதிகரித்ததால் மொத்தத்தில் 2020 ஆம் வருடம் கிட்டத்தட்ட 500 கோடி மாத்திரைகளுக்கும் அதிகமாக விற்பனை ஆகி உள்ளன.