தெலுங்கானா மாநிலத்தில் கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சியில் உள்ளது.
67 வயதான சந்திரசேகர் ராவ், முதல்-அமைச்சர் பதவியில் இருந்து விலகி, தனது மகன் கே.டி.ராமராவை அந்த நாற்காலியில் அமர வைக்க திட்டமிட்டுள்ளார்.
தெலுங்கானாவில் ஆளும் கட்சி அமைச்சர்கள், மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கடந்த சில மாதங்களாக ,கே.டி. ராமராவை. வருங்கால முதல்வர் என்றே பொது நிகழ்ச்சிகளில் குறிப்பிட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் செயற்குழு ஐதாபாத்தில் நாளை (ஞாயிறுக்கிழமை) பிற்பகல் கூடுகிறது.
செயற்குழு உறுப்பினர்கள் தவிர, அமைச்சர்கள், எம்.பி.க்கள்., எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள், மாநகராட்சி மற்றும் நகராட்சி தலைவர்கள், மாவட்ட பஞ்சாயத்து தலைவர்களுக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் கே.டி.ராமராவ், புதிய முதல்வராக தேர்வு செய்யப்படுவது உறுதியாகி விட்டது.
இப்போது கட்சியின் செயல்தலைவராகவும், மாநில தொழில்துறை அமைச்சராகவும் உள்ள ராமராவ், வரும் 17 ஆம் தேதிக்கு பிறகு முதல்வராக பொறுப்பு ஏற்பார் என தெரிகிறது.
– பா. பாரதி