மதுரை: தமிழ்நாடு என்பதை ஆங்கிலத்தில் TAMIL NADU என  எழுதப்பட்டு வருகிறது. அதை   THAMIZHL NAADU என மாற்ற கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை, இதுகுறித்து தமிழகஅரசு பரிசீலித்து முடிவெடுக்கும்படி அறிவுறுத்தி உள்ளது.

தூத்துக்குடியை சேர்ந்த செல்வகுமார் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுத்தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், தமிழ்நாடு என்பதன் ஆங்கில வார்த்தையை Tamil Nadu என்று எழுதப்படுகிறது. அதற்கு  பதில் Thamizhl Naadu என மாற்ற தமிழகஅரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த மனுமீது இன்று விசாரணைநடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, க  TAMILNADU என்பதை THAMIZHL NAADU என மாற்ற கோருவது பற்றி தமிழகஅரசு  பரிசீலித்து முடிவெடுக்க உத்தரவிட்டார். மேலும்,  தமிழின் சிறப்பை கருத்தில், இது தொடர்பாக  தலைமைச் செயலாளர், முதன்மைச் செயலாளர் பரிசீலித்து முடிவெடுக்க 8 வாரங்களில் முடிவெடுக்க  நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.