சந்தானம் நடிக்கும் பாரிஸ் ஜெயராஜ் படத்தின் அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை A1 புகழ் ஜான்சன் இயக்கி வருகிறார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஆர்துர் வில்சன் ஒளிப்பதிவு, துரை ராஜ் கலை இயக்கம், பிரகாஷ் படத்தொகுப்பு மேற்கொள்கின்றனர். கே. குமார் இந்த படத்தை தயாரிக்கிறார்.

இந்த திரைப்படத்தில் பிரபல இசையமைப்பாளர் தேவா ஒரு பாடலை பாடுகிறார். இந்த பாடலின் ரெக்கார்டிங் புகைப்படத்தை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

படத்தின் ட்ரைலர் காட்சி வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வந்தது. கானா பாடகராக இருக்கும் சந்தானத்தின் காதல் மற்றும் திருமணம் பற்றிய கதை தான் பாரிஸ் ஜெயராஜ் ட்ரைலரில் இடம் பெற்றுள்ளது. வட சென்னை கானா ரசனைக்கு ஏற்ப பாடல்களையும், பின்னணி இசையையும் தந்துள்ளார் சந்தோஷ் நாராயணன்.

சந்தானத்தின் பிறந்தநாளை முன்னிட்டு புளி மாங்கா புளிப் எனும் பாடல் வீடியோவை வெளியிட்டுள்ளனர் பாரிஸ் ஜெயராஜ் படக்குழுவினர். கானா முத்து பாடிய இந்த பாடல் வரிகளை ரோகேஷ் மற்றும் அசல் கோலார் எழுதியுள்ளனர். இந்த பாடல் காட்சியில் பிக்பாஸ் புகழ் சாண்டி மாஸ்டர் நடனமாடியிருப்பது கூடுதல் சிறப்பை சேர்த்துள்ளது.

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது. பிப்ரவரி 12-ம் தேதி இந்த படம் திரைக்கு வரவுள்ளது.