எட்ஸெட்ரா எண்டர்டெயிமென்ட் நிறுவனம் தயாரிப்பில் நடிகை ஹன்சிகாவின் 50-வது படமாக உருவாகியுள்ள திரைப்படம் மஹா.

இந்த படத்தில் நடிகர் சிலம்பரசன் கெளரவ தோற்றத்தில் நடித்துள்ளார். யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

ஸ்ரீகாந்த், தம்பி ராமய்யா, சனம் ஷெட்டி ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக ஜிப்ரான், ஒளிப்பதிவாளராக லக்‌ஷ்மன், எடிட்டராக ஜான் ஆப்ரஹாம் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு, சிலம்பரசன் டப்பிங் பேசும் வீடியோவை ப்ரோமோவாக வெளியிட்டுள்ளனர். இதில் பிரேக்கப் குறித்து சிம்பு டப்பிங் செய்திருப்பது ரசிகர்களின் ஆவலை தூண்டியுள்ளது.

[youtube-feed feed=1]