டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு 162 மருத்துவர்கள், 107 செவிலியர்கள் பலியாகி இருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்து உள்ளது.

.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 29ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. இந் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களின் நிலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

அந்த தகவல்கள் குறித்த கேள்விக்கு மத்திய சுகாதாத்துறை அமைச்சர் அஸ்வினி குமார் செளபே எழுத்துபூர்வமாக பதிலளித்துள்ளார். அவர் தமது பதிலில் கூறி இருப்பதாவது:

கொரோனாவால் இதுவரை நாடு முழுவதும் 162 மருத்துவர்கள், 107 செவிலியர்கள் மற்றும் 44 சுகாதாரத்துறை பணியாளர்கள் பலியாகி உள்ளனர். இந்த விவரங்கள் ஜனவரி 22ம் தேதி வரை அனைத்து மாநில அரசுகளிடமிருந்து பெறப்பட்டதன் அடிப்படையில் தெரிவிக்கப்படுகிறது என்று அவர் கூறி உள்ளார்.