
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா திருமணம் கடந்த 2017 டிசம்பர் 11-ம் தேதி இத்தாலியில் விமரிசையாக நடைபெற்றது.
அனுஷ்கா சர்மா லாக்டவுனில் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார்.. அவர்களின் முதல் குழந்தை இந்த வருடம் ஜனவரியில் வரவேற்க உள்ளதாகாவும் தெரிவித்திருந்தனர். அதன் தொடர்ச்சியாக தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக விராட் கோலி ட்விட்டரில் தெரிவித்தார்.
இந்நிலையில் தற்போது விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தங்கள் குழந்தையை கையில் வைத்திருக்கும் ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர். மேலும் பெண் குழந்தைக்கு வாமிகா என பெயர் சூட்டியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
https://www.instagram.com/p/CKvOEpOpEG_/
Patrikai.com official YouTube Channel