கட்டாக்: ஒடிசாவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இன்று பிற்பகல் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலம் கட்டாக்கின் துளசிபூரா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
5 வண்டிகள் உதவியுடன் தீயை அணைக்கும் பணிகள் தொடர்கின்றன. இது குறித்து கட்டாக்கின் காவல் துணை ஆணையர் பிரதிக் சிங் கூறியதாவது: தீ விபத்து ஏற்பட்டதையடுத்து அனைத்து நோயாளிகளும் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு உள்ளனர். மேலும், விபத்து குறித்த காரணம் இன்னும் கண்டறியவில்லை. மின்கசிவு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம் என்று கூறினார்.