டெல்லி: மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் 2021-22ம் ஆண்டுக்கான பொதுபட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வரலாற்றிலேயே முதன்முறையாக டிஜிட்டல் முறையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. முன்னதாக குடியரசுத் தலைவரை சந்தித்து ஆலோசனை நடத்திய நிதிஅமைச்சர் பின்னர் நாடாளுமன்றம் வருகை தந்தார். தொடர்ந்து பிரதமர் மோடி, சபாநாயகர் ஓம்பிர்லா நாடாளுமன்றம் வருகை தந்தனர்.
அதையடுத்து சபை தொடங்கியது. அதைத்தொடர்ந்து பட்ஜெட்டை நிதிஅமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வாசிக்கத் தொடங்கினார். தற்போது பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.