டெல்லி:  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்யும், பொதுபட்ஜெட் 2021-22 மத்திய பட்ஜெட்டை Budget Mobile App மூலம்  பார்க்க முடியும் என நிதிஅமைச்சகம் தெரிவித்து உள்ளது.

மத்தியஅரசின் பொதுபட்ஜெட் இன்று    காலை சுமார் 11 மணியளவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்திய வரலாற்றில் முதன்முறையாக டிஜிட்டல் முறையில்  தாக்கல் செய்யப்பட உள்ள இந்த பட்ஜெட்டை பொதுமக்கள்,  Budget Mobile App முலம் நேரலையில் காணலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) தாக்கல் செய்த பின்னர் பட்ஜெட் ஆவணங்கள் மொபைல் செயலியில் கிடைக்கும்.

இந்த பட்ஜெட் செயலியை, பொருளாதார விவகாரங்கள் துறையின் (DEA) வழிகாட்டுதலின் கீழ் தேசிய தகவல் மையம் (NIC) உருவாக்கியுள்ளது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த யூனியன் பட்ஜெட் மொபைல் செயலியை (Mobile App) ஆண்ட்ராய்டு சாதனங்களில் உள்ள கூகிள் பிளே ஸ்டோரிலிருந்தும், iOS சாதனங்களில் (ஐபோன் மற்றும் ஐபாட்) உள்ள ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்தும் பதிவிறக்கம் செய்யலாம். மத்திய பட்ஜெட் வலைத்தளத்திலிருந்தும் இதை நாம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

‘அரசியலமைப்பால் பரிந்துரைக்கப்பட்டுள்ள வருடாந்திர நிதிநிலை அறிக்கை (பொதுவாக பட்ஜெட் என அழைக்கப்படுகிறது), மானியங்களுக்கான தேவை (டிஜி), நிதி மசோதா உள்ளிட்ட மத்திய பட்ஜெட்டின் 14 ஆவணங்களையும் பயனர்கள் முழுமையாக அணுக இந்த செயலி உதவும். ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே ஆவணங்களை பார்க்க முடியும்.

இந்த செயலி Android மற்றும் iOS இயங்குதளங்களில் கிடைக்கும். பிப்ரவரி 1 ம் தேதி நிதியமைச்சரின் பட்ஜெட் உரை முடிந்ததும் செயலியின் பயனர்களுக்கு அனைத்து பட்ஜெட் ஆவணங்களுக்கான அணுகலும் கிடைக்கும்.

சுதந்திரத்திற்குப் பிறகு முதல்முறையாக, மத்திய பட்ஜெட் 2021 முற்றிலும் காகிதமற்ற முறையில் இருக்கும். தற்போது இருக்கும் தொற்றுநோயின் காரணமாக, பட்ஜெட் ஆவணங்கள் அச்சிடப்படாது.

இந்த முடிவிற்கு நாடாளுன்றத்தின் (Parliament) இரு அவைகளும் மத்திய அரசுக்கு அனுமதி அளித்துள்ளன.