சென்னை:
அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு உரிமையில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
பெங்களுரூ விக்டோரியா மருத்துவமனையில் சசிகலா இன்று பகல் மருத்துவமனையில் இருந்து கார் மூலமாக வெளியே வந்தார். அவருடைய காரில் அதிமுகவின் கறுப்பு, சிவப்பு மற்றும் அண்ணா படம் பொறித்த கொடி இடம்பெற்றிருந்தது.
இதுகுறித்து கருத்து தெரிவித்து அமைச்சர் ஜெயகுமார், அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இல்லாத சசிகலா எப்படி கட்சிக் கொடியை பயன்படுத்த முடியும் என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், இது சட்டத்திற்கு புறம்பானது எனக் கூறினார். கொடியை பயன்படுத்தியதற்காக சசிகலா மீது நடவடிக்கை மேற்கொள்வது குறித்து தலைமை முடிவு செய்யும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
Patrikai.com official YouTube Channel