சென்னை: தேர்தல் கூட்டணி குறித்து விஜயகாந்த் முக்கிய முடிவை நாளை அறிவிப்பார் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறி உள்ளார்.

சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி குறித்து பல்வேறு கட்சிகளும் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் தேமுதிக தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், 234 தொகுதி பொறுப்பாளர்கள், 39 மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் 6 மண்டல பொறுப்பாளர்கள் என 350க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தேமுதிக தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:

கூட்டணி குறித்து விஜயகாந்த் முக்கிய முடிவை நாளை அறிவிப்பார். நமக்கு முக்கியத்துவம் தராவிட்டால் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட தயாராக இருக்க வேண்டும் என்றார்.