ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய அருண் சந்திரன், கவுதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்கும் படம் மூலம் டைரக்டர் அவதாரம் எடுத்துள்ளார்.
இந்த படத்துக்கு ‘செல்லப்பிள்ளை’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மதுரையை களமாக கொண்டு இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப்படம் குறித்து டைரக்டர் அருண் சந்திரன் கூறியதாவது :
“நான் கவுதமின் தந்தை ‘நவரச நாயகன்’ கார்த்திக்கின் தீவிர ரசிகன். அவரது ‘பாண்டி நாட்டு தங்கம்’, ‘கிழக்கு வாசல்’ போன்ற படங்கள், கார்த்திக்கை புதிய உயரத்துக்கு கொண்ட சென்ற படங்கள்.
‘செல்லப்பிள்ளை’ படம், கவுதமின் சினிமா கேரியரையே மாற்றும்” என்கிறார், அருண்.
– பா. பாரதி
Patrikai.com official YouTube Channel