ஆம் ஆத்மி கட்சியின் தேசியக்குழு கூட்டம் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-அமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் நடைபெற்றது.
இன்னும் இரண்டு ஆண்டுகளில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், இமாச்சல பிரதேசம், கோவா, மற்றும் குஜராத் மாநிலங்களில் போட்டியிடுவது என இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
பஞ்சாப் மாநிலத்தில் பிரதான எதிர்க்கட்சியாக விளங்கும் ஆம் ஆத்மி, அந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 117 இடங்களில் போட்டியிடும்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் “டெல்லியில் எங்கள் அரசின் செயல்பாடுகளை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். எனவே தேசிய அளவில் மாற்று அணியாக உருவெடுக்கும் நோக்கில் ஆறு மாநில சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்தார்.
– பா. பாரதி