புதுடெல்லி:
‘எங்களை தாக்கியது விவசாயிகள் இல்லை என்று டெல்லியில் நடைபெற்ற விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் காயம்பட்ட போலீசார் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு அமல்படுத்திய மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஜனவரி 26 அன்று மாபெரும் டிராக்டர் பேரணி டெல்லியில் நடைபெற்றது. திட்டமிடப்பட்ட அனுமதி வழங்கப்பட்ட வழிகளில் பெரும்பாலனா விவசாயிகள் பேரணி நடத்திய நிலையில், சிலர் மட்டும் அனுமதியில்லாமல் செங்கோட்டையை நோக்கி பேரணியாக சென்றனர். அப்போது செங்கோட்டையில் கலவரமும் வெடித்தது.

“கலவரத்தின் போது பணியில் இருந்த காவலர்கள் தங்களை தற்காத்துக் கொள்ள அடைக்கலம் அடைந்தனர். நானும் என்னை தற்காத்துக் கொள்ள முயன்றேன். நான் க்ரில் கேட்டை தாண்ட முயன்ற போது, அது சரிந்து என் மீது விழுந்தது. என்னை காப்பாற்றுமாறு கதறிய போதும் காவலர்கள் அவர்களை தற்காத்து கொள்ள முயன்றனர். பத்து நிமிடங்களுக்கு பிறகே என்னை காவலர்கள் சில மீட்டனர்” என தெரிவித்துள்ளார் டெல்லி பெண் காவலரான ரேகா குமாரி.

கிட்டத்தட்ட 400க்கும் மேற்பட்ட போலீசார் இந்த கலவரத்தில் காயம்பட்டுள்ளனர். இதில் சிலர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக 25 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 19 பேர் கைதாகி உள்ளனர்.