அறிவோம் தாவரங்களை – தேன் பழம் மரம்
தேன் பழம் மரம்.(Muntingia calabura).
மெக்சிகோ, அமெரிக்கா, பெரு, பொலிவியா உன் தாயகம்!
வறண்ட நிலங்களில் வளரும் சிறந்த மரம் நீ !
உன் இன்னொரு பெயர் சிங்கப்பூர் செர்ரி மரம்!
12 மீ.வரை உயரம் வளரும் பசுமை மரம் நீ!
தேநீர் அருந்த இலை தரும் இனிய மரம் நீ!
ஜாம் செய்யக் கனி தரும் கவின் மரம் நீ!
தலைவலி, குடற்புண், சர்க்கரை நோய், புற்று நோய், மூட்டு வலி, மூச்சுத் திணறல், மலச் சிக்கல் ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!
வைட்டமின் சி, இரும்புச் சத்து மற்றும் நார்ச் சத்து நிறைந்த நயன்மிகு மரம் நீ!
பூ, இலை, காய், பழம், பட்டை, வேர் என எல்லாம் பயன்படும் நல்ல மரம் நீ!
கயிறு திரிக்க நார் தரும் தண்டு மரமே!
கட்டிட வேலைகளுக்கும் விறகாகவும் பயன்படும் கெட்டி மரமே!
அணில், குரங்குகளுக்குக் கனி கொடுக்கும் வள்ளல் மரமே!
வெள்ளை நிறப் பூப்பூக்கும் நல்ல மரமே!
சிவப்பு ,இளஞ் சிவப்பு கனி கொடுக்கும் கவின் மரமே!
விதைகள், தண்டுகள் மூலம் இனப் பெருக்கம் செய்யும் இனிய மரமே!
மஞ்சள் நிற விதை கொடுக்கும் மகிமை மரமே!
60 வகையான பறவைகள் மற்றும் சிறு விலங்குகளின் சரணாலயமே!
அலங்கார மரமே!
நீவிர் பல்லாண்டு வாழ்க!வளர்க!உயர்க!
நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்
நெய்வேலி.
📞9443405050.