புதுடெல்லி:
நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊடரங்கு உத்தரவை பிப்ரவரி 28-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் 25ம் தேதி நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு ஒவ்வொரு மாதமும் புதிய தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு வருகிறது.

தளர்வுகளால் பேருந்து, ரயில், உள்நாட்டு விமான போக்குவரத்து இயல்பு நிலை அடைந்துள்ளது. இதேபோல் இபாஸ் சிஸ்டமும் ரத்தாகி இயல்பு நிலை திரும்பி உள்ளது. கடைகள், வணிக நிறுவனங்கள் என அனைத்தும் இயங்கி வருகின்றன. கொரோனா தடுப்பு வழிமுறைகளுடன் அனைத்து வணிக நடவடிக்கைகளும் நடந்து வருகின்றன. கல்லூரிகள், பள்ளிகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. கல்லூரிகள் திறக்கப்பட்டு விட்டன.

இந்நிலையில் நாடு முழுவதும் பிப்ரவரி 28ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தற்போதுள்ள ஊரடங்கு நடைமுறைகளே பிப்ரவரி 28-ம் தேதி வரை தொடரும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது