கொல்கத்தா: பிசிசிஐ தலைவரும் முன்னாள் கேப்டனுமான கங்குலிக்கு மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட கொல்கத்தா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

கங்குலிக்கு கடந்த 2ம் தேதி லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதால், கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட்ஸ் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு இதயத்தில் உள்ள 3 தமனிகளில் அடைப்பு இருந்தது தெரிய வர ஒரு அடைப்பு ஸ்டென்ட் குழாய் பொருத்தப்பட்டு, அகற்றப்பட்டது.
5 நாள் சிகிச்சைக்கு பின்னர் அவர் வீடு திரும்பினார். தாம் நலமுடன் இருப்பதாகவும், சிகிச்சை அளித்த மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.
இந்நிலையில் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர் கொல்கத்தா மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.