அறிவோம் தாவரங்களை – ஏழிலைப்பாலை மரம்

ஏழிலைப்பாலை மரம். (Alstonia scholaris)

பாரதம்  & ஆசியா உன் தாயகம் !

2000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய தொன்மை மரம் நீ!

மேற்கு தொடர்ச்சி மலைகளில் அதிகம் வளர்ந்திருக்கும் அழகு மரம் நீ!

சமஸ்கிருத்தில்  நீ சப்தபர்ணா!

ஏகாலி மரம், ஏழிலைக்கன்னி, பேய் மரம், ஏழிலம் பாலை எனப் பல்வேறு பெயர்களில் பரிணமிக்கும் பசுமை மரம் நீ!

40 மீ.வரை உயரம் வளரும் நல்ல மரம் நீ!

ஒரேகாம்பில் ஏழு இலைகளைப் பெற்று இருப்பதால் நீ ‘ஏழிலை மரம்’ என்றானாய்!

வால்மீகி முனிவர்உனக்குஇட்டபெயர் ‘சப்த சாதா’!    தி

ருக்கழிப்பாலை(கடலூர்)  ,திருப்பாலைவனம் (திருவள்ளூர்), திருநாகேஸ்வரம் (தஞ்சை) கோயில்களின் தலமரம் நீ!

கொசுத் தொற்றுநோய்,  காயம், தாய்ப்பால் சுரப்பு, வயிற்றுப்போக்கு , அஜீரணம், தலைவலி, மூட்டு வலி, தோல் நோய்கள் ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!

கரும்பலகை, சிலேட், பென்சில், காகிதம், நாற்காலி, மேஜை, மரப்பெட்டி தேயிலை சேகரிப்புப் பெட்டி, எனப்  பல்வகையில் பயன்படும் நல்வகை மரம் நீ!

வாசனை திரவியம்,  தைலம், டிஞ்சர் தயாரிக்கப் பயன்படும் நயன்மிகு மரமே!

இலை, பூ, வேர்,பட்டை என எல்லாம் பயன்படும் நல்ல மரமே!

பச்சை & வெள்ளை நிறப்பூக் கொடுக்கும் பசுமை மரமே!

அழகுக்காக வளர்க்கப்படும்  வீட்டுத் தாவரமே!

நீவிர் பல்லாண்டு வாழ்க!வளர்க !உயர்க!

நன்றி  பேரா.முனைவர். ச.தியாகராஜன்

நெய்வேலி.

📱 9443405050