கர்நாடக மாநிலத்தில் பி.எஸ். எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது..

அண்மையில் எடியூரப்பா தனது மந்திரி சபையை விரிவு படுத்தினார், 7 அமைச்சர்கள், புதிதாக சேர்க்கப்பட்டனர்.

அமைச்சர் பதவி கிடைக்காத பல பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

“எடியூரப்பாவை பிளாக் மெயில் செய்து மிரட்டி சிலர் மந்திரி பதவி பெற்றுள்ளனர்” என அந்த எம்.எல்.ஏ.க்கள் பகிரங்கமாகவே குற்றம் சாட்டினர்.

இந்த நிலையில் புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்களுக்கு நேற்று இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன.

தாங்கள் விரும்பிய துறைகள் அளிக்கப்படாததால் அவர்களில் பலர் ஆத்திரம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் எடியூரப்பா தலைமையில் நேற்று நடந்த மந்திரி சபை கூட்டத்தை நான்கு அமைச்சர்கள் புறக்கணித்து விட்டனர்.

– பா. பாரதி