அறிவோம் தாவரங்களை –  பீ நாறி மரம்

பீ நாறி மரம். (Ailanthus altissima).

ஆஸ்திரேலியா உன் தாயகம்!

காடுகளில் அதிகம் வளரும் கவின் மரம் நீ!

பீய்யமரம் பீதணக்கன்,என இருவகைப் பெயர்களில் விளங்கும் இனிய மரம் நீ!

இந்தியில் நீ ‘குடல்து’!  தெலுங்கில் நீ ‘பீப்படமானு’!  மலையாளத்தில் நீ ‘மட்டிப்பால்’!

கிருஷ்ணகிரி, சேலம், கோவை, வேலூர்     மாவட்டங்களில் அதிகம் வளரும் அற்புதம் மரம் நீ!

தீக்குச்சி, பென்சில், எழுதுபலகை, நசடு பலகை, மரப்பெட்டி, தக்காளிப் பெட்டி, தேநீர் & ஒட்டுப்பலகை,  பழப்பெட்டி செய்ய பயன்படும் நயன்மிகு மரமே!

10 ஆண்டுகளில் பலன் தரும் பயன்மிகு மரமே!

75  ஆண்டுகள் வரை வாழும் இனிய மரமே!

மண்புழுவிற்கு தழை இலை தரும் வேளாண் மரமே!

கட்டிடங்களின் ஒட்டுப்பலகை  மரமே!

விறகாய்ப்  பயன்படும் பல்கிளை மரமே!

மண் அரிப்பைத்   தடுக்கும் காவலனே!

வறட்சியைத்தாங்கி வளரும் புரட்சி மரமே!

தரிசு நிலங்களின்   வாரிசே!

மென்மையான மரமே!

ஏக்கருக்கு 3.3 லட்சம் வரை வருமானம் ஈட்டித்தரும் பணப்பயிரே!

நீவிர் பல்லாண்டு வாழ்க! வளர்க! உயர்க!

நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்

நெய்வேலி.

📞9443405050.