துபாய்: துபாயில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால், இங்கு அத்தியாவசியமற்ற அறுவை சிகிச்சை உள்பட பொழுதுபோக்கு நிகழ்வுகளுக்கு தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டு உள்ளது.
இதுகுறித்து, துபாயின் சுகாதாரத்துறை செயலாளர், நேற்று (புதன்கிழமை) தனது இணையதளத்தில் வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையில், வியாழக்கிழமை (இன்று) முதல் நடைமுறையில் உள்ள நீட்டிக்கப்பட்டுள்ள கொரோனா தடை, மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, நாட்டில், ஒரு மாதத்திற்கு அத்தியாவசியமற்ற அறுவை சிகிச்சையையும் ஹோட்டல்களிலும் உணவகங்களிலும் நேரடி பொழுதுபோக்கையும் நிறுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், வளைகுடா நாடுகளில் உள்ள சுமார் 9 மில்லியன் மக்கள்தொகையில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி போடும் நோக்கத்துடன் வளைகுடா அரசு தனது நோய்த்தடுப்பு பிரச்சாரத்தை அதிகரித்துள்ளது. அங்கு சீனாவின், சினோபார்மின் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்து பொது மக்களுக்கு கிடைக்கச் செய்துள்ளது.
ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் தயாரிக்கும் தடுப்பூசி மூலம் துபாய் , தனது நாட்டு மக்களுக்கு தடுப்பூசி போட்டு வருவது குறிப்பிடத்தக்கது.