ஸ்ரீநகர்: ஜம்மு எல்லையில் ஊடுருவிய 3 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லை கட்டுப்பாட்டு கோடான அக்னூர் கோர் பகுதியில் ஊடுருவல்கள் இருப்பதை அறிந்த இந்திய பாதுகாப்பு வீரர்கள், தீவிரவாதிகளை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்.
இருதரப்பிலும் பல மணி நேரம் தாக்குதல்கள் நீடித்தன. இந் நிலையில், ராணுவம் நடத்திய தாக்குதலில், 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்திய தரப்பில் 4 வீரர்கள் காயமடைந்தனர்.
இது குறித்து ராணுவ அதிகாரிகள் கூறியதாவது: பாகிஸ்தான் தரப்பில் நடத்தப்பட்ட ஊடுருவலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தியா தரப்பில் சரியான பதிலடி கொடுக்கப்பட்டு ஊடுருவல் முறியடிக்கப்பட்டது என்று கூறினர்.