இடாநகர்: அருணாச்சல பிரதேச முன்னாள் ஆளுநர் மாதா பிரசாத் காலமானார். அவருக்கு வயது 96.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஜான்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மாதா பிரசாத். 1993ம் ஆண்டு அருணாச்சல பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டு பணியாற்றினார்.
வயது முதிர்வின் காரணமாக மாதா பிரசாத் உடல் உறுப்புகள் செயலிழந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். தொடர் சிகிச்சைக்காக சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால் உடல்நிலை மேலும் மோசமடைய, மாதா பிரசாத் காலமானார்.