சென்னை: பிரபல கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரனுக்கு சொந்தமான  அடையாறு  இல்லம், கோவை காருண்யா பல்கலைக்கழகம் உள்பட  உள்பட 28 இடங்களில் ஐடி ரெய்டு நடைபெற்று வருகிறது.

பிரபல மத போதகரான பால் தினகரன் ஏசு அழைக்கிறார் என்ற பெயரில் கிறிஸ்தவ அமைப்பை நடத்தி வருகிறார். தமிழகம் உள்பட நாடு முழுவதும் மட்டுமின்றி உலகம் முழுவதும் கிளைகள் உள்ளன.  மேலும் பல்வேறு கல்வி நிறுவனங்களும் உள்ளன.

கோவையில் உள்ள காருண்யா பல்கலைக்கழகம், பல நூறு ஏக்கரில் அமைந்துள்ளது. தான், தனது மனைவி, தாய், குழந்தைகள் உள்பட அனைவரும் கிறிஸ்தவ மத போதனைகள் செய்து வருகின்றனர்.

இவருக்கு தமிழகம் உள்பட உள்நாடு, வெளிநாடுகளிலும் ஏராளமான சொத்துக்கள் உள்ளன. இந்நிலையில் இன்று திடீரென பால் தினகரனுக்கு சொந்தமான  சென்னை பாரிமுனை, அடையாறு, கோவை காருண்யா பல்கலை உள்பட தமிழகத்தில் 28 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றார்.

கோடிக்கணக்கான ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, இன்று காலை 8 மணி முதல் வருமான வரித்துறை ரெய்டு நடைபெற்று வருகிறது.

[youtube-feed feed=1]