அறிவோம் தாவரங்களை – பாலை மரம்

பாலை மரம்.(Manilkara hexandra).

காட்டில் வளரும் நாட்டு மரம் நீ!

பலகையாய்ப் பயன்படும் வலிமை மரம் நீ

!80 அடி வரை உயரம் வளரும் இனிய மரம் நீ! பாலை நிலத்தில் வளரும் பசுமை மரம் நீ!

இலங்கை தொடர் வண்டி தொடக்ககால  சேவையில்  பயன்பட்ட தண்டவாள படுக்கை கட்டை நீ !

ஆங்கிலேயர் ‘இலங்கை இரும்பு’ என அன்பாக அழைத்த அருமை மரம்  நீ!

இலங்கை, இந்தியா, வங்காள தேசம், மியான்மர், கம்போடியா, சீனா, வியட்நாம்,  தாய்லாந்து ஆகிய நாடுகளில் அதிகமாக வளர்ந்திருக்கும் அற்புத மரம்  நீ!

உலக்கைப் பாலை, குடசப்பாலை, ஏழிலைப்பாலை, முசுக்கைப் பாலை, எனப் பல்வேறு பெயர்களில் பரிணமிக்கும் பசுமை மரம் நீ!

திருக்கழுக்குன்றம், வேதகிரீஸ்வரர் கோயில்களின் தலமரம் நீ!

மலேரியா ஜுரத்துக்கு ஏற்ற மருத்துவ  நிவாரணி நீ!

பென்சில்,சிலேட்,கரும்பலகை, தைலம், வாசனைத் திரவியங்கள் தயாரிக்கப் பயன்படும் நயன்மிகு மரம் நீ !

முடிச்சுகள் நிறைய இருக்கும் பல்கிளை மரமே!

ஆண்டுக்கு ஒருமுறை பழம் தரும் அரிய மரமே!

நூறாண்டுகளுக்கு மேல் மக்காமல் கிடக்கும் நூதனமரமே!

நீவிர் பல்லாண்டு வாழ்க!வளர்க! உயர்க!

நன்றி பேரா.முனைவர். ச.தியாகராஜன்

நெய்வேலி.

📱9443405050.