கவுகாத்தி: ரயில்வே ஒப்பந்தங்களை வழங்க சாதகமாக நடக்க 1 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிய, ரயில்வே அதிகாரியை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
அசாம் மாநிலம் மலிகோவானில் உள்ள வட கிழக்கு முன்னணி ரயில்வேயில், பணிபுரிபவர் மகேந்தர் சிங் சவுகான். 1985ம் ஆண்டு பேட்ஜை சேர்ந்த ஐஆர்இஎஸ் அதிகாரி ஆவார்.
ரயில்வே ஒப்பந்தத்தை, தனியாருக்கு வழங்குவதில் சாதகமாக நடந்து கொள்ள ரூ.1 கோடி லஞ்சம் வாங்கும் போது சிபிஐ அதிகாரிகள் கையும், களவுமாக கைது செய்தனர். லஞ்சபணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, டெல்லி, அசாம், உத்தரகாண்டில் 22 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.