ஓஸ்லோ: நார்வேயில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 23 போ் பலியாக, இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

அமெரிக்காவின் பைஸா் மற்றும் ஜொ்மனியின் பயோஎன்டெக் நிறுவனங்கள் கூட்டாக தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி நார்வேயில் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளா்கள், கொரோனா மரண அபாயம் அதிகம் கொண்ட வயோதிகா்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
இந் நிலையில், தடுப்பூசி போட்டுக் கொண்ட 23 போ் உயிரிழந்து உள்ளனா். அவா்களில் 13 பேருக்கு தடுப்பூசி பாதிப்பை ஏற்படுத்த மரணத்தை சந்தித்து உள்ளனர். இதுதவிர, மேலும் 9 பேருக்கு தடுப்பூசியால் மோசமான பக்க விளைவுகளும் 7 பேருக்கு மிதமான பக்க விளைவுகளும் ஏற்பட்டன.
கொரோனா தடுப்பூசி பாதிப்பால் உயிரிழந்த 13 பேரும் 80 வயதை கடந்தவா்கள். தடுப்பூசி போட்ட பிறகு ஏற்பட்ட காய்ச்சல், குமட்டல் போன்ற சாதாரண பக்க விளைவுகளை தாங்க முடியாமல் அவா்கள் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். இருப்பினும் இது தொடர்பான விசாரணைக்கு நார்வே அரசு உத்தரவிட்டுள்ளது.