துரை

திருமணத்தில் மணமக்களுக்கு மொய் வழங்க கியூ ஆர் கோட் உடன் தம்பதியர் அமர்ந்துள்ள படம் வைரலாகி வருகிறது.

தற்போது அனைத்து இனங்களிலும் டிஜிடல் பணப் பரிவர்த்தனை முறை பிரபலமாகி உள்ளது.   முதலில் சிறிதளவே பிரபலமான நிலையில் பண மதிப்பிழப்பு நேரத்தில் பலரிடமும் ரொக்க பணித தட்டுப்பாடு ஏற்பட்டது.  அதையொட்டி மிகவும் பிரபலமாகிய டிஜிடல் பரிவர்த்தனை கொரோனா காலத்தில் மிகவும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது,

டிஜிடல் பணப்பரிவர்த்தனையால் மொபைல் செயலிகள் மூலம் பணப் பரிவர்த்தனை வேகமாகச் செய்ய முடிந்தது.  இதிலும் ஒரு சிறு குழப்பம் இருந்தது.  குறிப்பிட்ட செயலிகள் மூலம் அந்தந்த செயலிகள் உள்ளோருக்கு மட்டும் பணம் அனுப்ப முடிந்தது.  இதற்காக கியூ ஆர் கோட் முறை பயனுக்கு வந்தது.  இதன் மூலம் ஒரே செயலியில் இருந்து பல செயலிகளுக்கு பணம் பெற அல்லது செலுத்த முடியும்.

இந்த முறையைப் பலரும் பின்பற்றுகையில் ஒரு திருமண விழாவில் மொய் வழங்க கியூ ஆர் கோட் பெறப்பட்டுள்ளது.  திருமண விழாவில் மணமக்கள் மொய் வாங்க கியு ஆர் கோட்  பொருத்தப்பட்ட பலகையுடன் அமர்ந்து மொய் வாங்கி உள்ளனர்.  மதுரையில் நடந்த இந்த நிகழ்வு குறித்த புகைப்படம் வெளியாகி இணையதளத்தில் பலராலும் பரப்பப்பட்டு வைரலாகி உள்ளது.