‘ஷகீலா’ படம் தோல்வி அடைந்து விட்டதால் அதில் நாயகியாக நடித்த ரிச்சா சத்தா சோர்வடைந்துள்ளார்.
அவர் புதிதாக நடித்துள்ள இந்திப்படமான ‘தி மேடம் சீஃப் மினிஸ்ட்ர்’ படம் வெளியாகும் முன்னரே சர்ச்சைக்கு உள்ளாகி விட்டது.
ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த பெண் பல்வேறு தடைகளை தாண்டி முதல்-அமைச்சர் ஆவது போல் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் போஸ்டர் அண்மையில் வெளியானது.
கதாநாயகி ரிச்சா சத்தா கையில் துடைப்பத்துடன் இருப்பது போல் போஸ்டரில் அவரது தோற்றம் வெளியாகி இருந்தது.
இதற்கு தலித் சமூக மக்கள் கண்டனம் தெரிவித்து, ரிச்சா சத்தாவையும், படக்குழுவையும் வறுத்தெடுத்தனர்.
“இன்னும் எத்தனை சினிமாக்களில் தலித் பெண்ணை இப்படியே சித்தரிப்பீர்கள்?” என கேள்வி எழுப்பி இருந்தனர்.
இதனால், அந்த போஸ்டரை கடாசி விட்டு, மறுநாளே புதிய போஸ்டர் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், ரிச்சா சத்தா. இப்படி ஒரு போஸ்டர் வெளியானதற்கு மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
“எனது தொழில் நடிப்பது, போஸ்டருக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை. இருந்தாலும், வருந்துகிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
– பா. பாரதி