கோயம்புத்தூர்

ரும் 23 ஆம் தேதி முதல் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழக சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தைத் தொடங்க உள்ளார்.

வரும் ஏப்ரல் மே மாதங்களில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.  இதில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியும் பிரதான கட்சிகளாக மோதுகின்றன.  தற்போது இரு கூட்டணியும் தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக நடத்தி வருகின்றன.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலைச் சந்திக்க முழு வீச்சில் தயாராகி வருகின்றது.  இதில் ஒரு பகுதியாக தமிழகத்தின் மேற்கு மண்டலங்களில் 3 நாட்கள் தொடர் பிரசாரம் செய்யக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தி9ட்டமிட்டுள்ளார்.  அதன்படி வரும் 23 ஆம் தேதி அன்று அவர் தனது தமிழக சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தைக் கோவையில் தொடங்குகிறார்

கோவையில் ஏற்பாடு செய்துள்ள பொதுக்கூட்டத்தில் ஜனவரி 23 ஆம் தேதி அன்று ராகுல் காந்தி பங்கேற்று உரையாற்றுகிறார்.  அதே தினத்தன்று அவர் சிறு, மற்றும் குறுந்தொழில் முனைவோருடன் சந்திப்பு ஒன்றை நடத்த உள்ளார்.  அடுத்து 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் ராகுல் காந்தி திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் பிரசாரம் செய்கிறார்.